மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக சேவகி டாக்டர் லக்ஷ்மி ராஜாராமிற்கு சிங்கப்பெண் விருது

மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக சேவகி டாக்டர் லக்ஷ்மி ராஜாராமிற்கு சிங்கப்பெண் விருது

திருவொற்றியூர் மார்ச் 8

திருவொற்றியூர் உதயம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் சுதந்திர போராட்ட தியாகி திலக் சாஸ்திரி மகளுமான டாக்டர் லட்சுமி ராஜாராம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வடசென்னை பகுதியில் பல சமூக சேவைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஏழைப் பெண்கள் வாழ்வில் முன்னேற அவர்களுக்கு தையல் எந்திரம் தொழில் தொடங்க உதவித்தொகை பள்ளி மாணவர்களுக்கு சீருடை புத்தகங்கள் விளையாட்டுப் பொருட்கள் ஊனமுற்றவர்களுக்கு உபகரணங்கள் வழங்கியுள்ளார் தண்டையார்பேட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு ஹிந்தி மொழியை கற்பித்து வருகிறார் கொரோனா அக்காலத்தில் வாழ்வாதாரம் இன்றி தவித்த ஏழைகளுக்கு உணவு அரிசி மளிகை பொருட்களை பல பகுதிகளுக்கு சென்று வழங்கினார் முக கவசம் அணிவது சமூக இடைவேளை பற்றி பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கியுள்ளார் திருவொற்றியூரில் பல பகுதிகளில் மரக்கன்றுகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் இத்தகைய சேவைகளை பாராட்டி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் எஸ்தர் ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பு சார்பில் மாண்புமிகு நீதியரசர் வள்ளிநாயகம் சிங்கப் பெண் 2021 விருது வழங்கி கௌரவித்தார் இந்நிகழ்ச்சியில் கலைமாமணி டாக்டர் லயன் மணிலால் டாக்டர் அம்பேத்கர் மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் என் ரமேஷ் குமார் பத்திரிகையாளர் காதர் உசேன் சமூக சேவகர் ராஜாமுகமது அலி டாக்டர் ஜி ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்